என்னை ராசி இல்லாத நடிகை என்றனர் - பூஜா ஹெக்டே


என்னை ராசி இல்லாத நடிகை என்றனர் - பூஜா ஹெக்டே
x

இதற்கு முன் என்னை ராசி இல்லாதவள் என்று சொன்னவர்கள் இப்போது என்னை நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகை என்கின்றனர் என்று நடிகை பூஜா ஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஜீவாவுடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை சுமாராகவே இருந்தது. படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் மனம் தளராமல் படிப்படியாக வளர்ந்து இப்போது முன்னணி நடிகை இடத்துக்கு வந்துள்ளார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், ''நான் இந்த இடத்துக்கு வர நிறைய உழைத்து இருக்கிறேன். எப்போதும் என்னை ஒரு பிரபல நடிகை என்று நினைக்கவில்லை. எனது நட்சத்திர அந்தஸ்தை நினைத்து தலைக்கனமும் இல்லை. இப்போதும் நான் பூமியில்தான் இருக்கிறேன். இதற்கு முன் என்னை ராசி இல்லாதவள் என்று சொன்னவர்கள் இப்போது என்னை நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகை என்கின்றனர். சினிமா துறையில் நட்சத்திர அந்தஸ்து நிரந்தரம் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே அதைப்பற்றி யோசிப்பதும் இல்லை. மதிப்பதும் இல்லை. சினிமாவில் நன்றாக நடிக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகர்-நடிகையாக இருந்தாலும் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ரசிகர்களுக்கு பிடித்தால் புதிதாக வருபவர்களுக்கும் பெரிய அந்தஸ்து கொடுப்பார்கள்" என்றார்.

1 More update

Next Story