வரலட்சுமி திருமணம் : விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு நேரில் அழைப்பு


வரலட்சுமி திருமணம் : விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு நேரில் அழைப்பு
x

வரலட்சுமி தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் வரலட்சுமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவியின் மகளான இவர், கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சிம்பு நாயகனாக நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்த வரலட்சுமி, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட சில படங்களில் வில்லியாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்ததார். அதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், 39 வயதை கடந்துள்ள நிலையில், நிக்கோலாய் சச்தேவ் என்பரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிக்கோலாய், தனது மனைவியை பிரிந்துவிட்ட நிலையில், தற்போது வரலட்சுமியை திருமணம் செய்ய உள்ளார். பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணியில் சரத்குமார் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

வரலட்சுமி தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story
  • chat