இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவம்..!


இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவம்..!
x

ஐக்கிய அரபு அமீரகம் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

'மாநாடு', 'மன்மத லீலை' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. கோல்டன் விசா பெற்றதை வெங்கட் பிரபு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலருக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.

கோல்டன் விசா ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story