வெற்றி, ஷிவானி நாராயணன் நடிக்கும் பம்பர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!


வெற்றி, ஷிவானி நாராயணன் நடிக்கும் பம்பர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
x

வெற்றி மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடிக்கும் பம்பர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் முத்தையாவின் முன்னாள் உதவியாளர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்து வரும் திரைப்படம் 'பம்பர்'. இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார்.

கேரளா லாட்டரியை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் பேரடி, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ள 'பம்பர்' படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'நெடுநல்வாடை' புகழ் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் 'பம்பர்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story