லாட்டரி கதையில் வெற்றி


லாட்டரி கதையில் வெற்றி
x

லாட்டரியை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. பணத்துக்காக எதையும் செய்யும் நாயகன் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும்போது சில பிரச்சினைகளில் சிக்குவதும் அதில் இருந்து எப்படி விடுபடுகிறார் என்பதும் கதை.

`பம்பர்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் `8 தோட்டாக்கள், ' `மெமரீஸ்', `ஜிவி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவானி நாராயணன் நாயகியாக வருகிறார். ஹரிஷ் பெராடி, ஜி.பி.முத்து, தங்கதுரை, கவிதா பாரதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செல்வக்குமார் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, கேரளாவில் அரசே லாட்டரி நடத்துகிறது. இந்த லாட்டரியை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. பணத்துக்காக எதையும் செய்யும் நாயகன் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும்போது சில பிரச்சினைகளில் சிக்குவதும் அதில் இருந்து எப்படி விடுபடுகிறார் என்பதும் கதை.

புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வருகிறார். வேதா பிக்சர்ஸ் சார்பில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளது''என்றார். இசை:கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி.


Next Story