மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய்சேதுபதி


மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய்சேதுபதி
x

நடிகர் விஜய் சேதுபதி மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ஏற்கனவே விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்து இருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்துள்ளார். அவரது வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்சேதுபதியிடம் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பியபோது, "இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்" என்றார்.

இந்த நிலையில் மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்திலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகும் 'புஷ்பா 2-ம் பாகத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story