விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதி... மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ரசிகர்கள்


விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதி... மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ரசிகர்கள்
x

நடிகர் விஜய் சேதுபதி சார்பில் அவரது ரசிகர்கள் சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு கல்விக்கான உதவித்தொகையை வழங்கினர்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை வரவழைத்து அவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சார்பில் அவரது ரசிகர்கள் சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு கல்விக்கான உதவித்தொகையை வழங்கியுள்ளனர். சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த அஸ்புதின் என்பவரது மகள் ஜாஸ்மின். அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு ஏழ்மை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாமல் உள்ளார். இதையறிந்த விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள், மாணவி கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்கினர்.




Next Story