விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு


விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2022 3:14 PM IST (Updated: 5 Oct 2022 3:15 PM IST)
t-max-icont-min-icon

யாதும் ஊரே யாவரும் கேளிர் இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

சென்னை,

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதனுடன் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story