விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

இந்த நிலையில்' டிஎஸ்பி' திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


Next Story