'தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்து வைத்த விக்ரம்


தங்கலான்  படக்குழுவினருக்கு விருந்து வைத்த விக்ரம்
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தங்கலான்.

சென்னை,

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இப்படம் கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இதில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் விக்ரம், பார்வதி போன்றோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் , நடிகர் விக்ரம், "தங்கலான்' படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story