ஆஸ்கார் செல்லும் விக்ரம் படம்


ஆஸ்கார் செல்லும் விக்ரம் படம்
x

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் அதிக பொருட் செலவில் தயாராகிறது. இதில் விக்ரமின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட தலைமுடி, தாடி, மெலிந்த தேகம் என்று பழங்குடி இனத்தை சேர்ந்தவரைப்போல் உருவத்தையே மாற்றி நடித்து வருகிறார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கோலார் தங்க வயல் பின்னணில் நடக்கும் கதையம்சத்தில் அதிரடி சண்டை படமாக உருவாகிறது. இதில் நாயகியாக பார்வதி நடிக்கிறார். மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த வருடம் இறுதியில் தங்கலான் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை ஆஸ்கார் போட்டிக்கும், கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து உள்ளார். 'தங்கலான்' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

'தங்கலான்' படப்பிடிப்பு ஒத்திகையில் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

1 More update

Next Story