வில்லியாக நடிப்பது ஏன்? நடிகை வரலட்சுமி விளக்கம்


வில்லியாக நடிப்பது ஏன்? நடிகை வரலட்சுமி விளக்கம்
x

வில்லியாக நடிப்பது ஏன்? என்று நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அதிக படங்களில் வில்லியாக நடித்து இருக்கிறார். இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு வில்லியாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் சில வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க நான் மட்டுமே தகுதியான நிலையில் இருக்கிறேன்.

இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நான் நடித்தபோது ஒரு காட்சியில் என்னை அடிப்பார்கள். அடி வாங்கியபடியே வசனம் பேச வேண்டும். அதில் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால் பாலா கட் சொல்ல மறந்து விட்டார். என்னை அடித்ததில் காயம் ஏற்பட்டது. அதை பார்த்து பாலா அதிர்ச்சியானார். காட்சி நன்றாக வந்த திருப்தி மட்டுமே எனக்கு இருந்தது. பிறகு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த படத்தில் இருந்து பாலா என் குருவாகி விட்டார்'' என்றார்.

1 More update

Next Story