சிரஞ்சீவி மீண்டும் மகனுடன் இணைந்து நடிப்பாரா?


சிரஞ்சீவி மீண்டும் மகனுடன் இணைந்து நடிப்பாரா?
x

தெலுங்கு சினிமாவின் ‘மெகா ஸ்டார்' ஆன சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என்று தகவல் வெளியானது.

தெலுங்கு சினிமாவின் 'மெகா ஸ்டார்' ஆன சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் 'ஆச்சார்யா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என்று தகவல் வெளியானது.

ஆனால் இதை சிரஞ்சீவி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

'ஆச்சாரியா' படத்தின் தோல்வி என்னை பாதிக்கவில்லை. ராம் சரணையும் இது பாதிக்காது. ஏனெனில் டைரக்டர் சொன்னபடி படத்தில் நடித்து முடித்தோம். ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை அங்கீகரிக்கவில்லை. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டோம் என்று அர்த்தம் ஆகி விடாது. வாய்ப்பு வந்தால், காலம் கனிந்தால் மீண்டும் இணைந்து நடிப்போம்.

இவ்வாறு சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.

1 More update

Next Story