மறுமணம் செய்து கொள்வேன் - நடிகை சோனியா அகர்வால்


மறுமணம் செய்து கொள்வேன் - நடிகை சோனியா அகர்வால்
x

மறுமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சோனியா அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் 2003-ல் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் செல்வராகவனை காதலித்து 2006-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

செல்வராகவன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். சோனியா அகர்வாலும் மறுமணத்துக்கு தயாராவதாக அவ்வப்போது வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. பாடகர் எஸ்.பி.பி.சரணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரை சோனியா அகர்வால் மணக்க இருப்பதாகவும் பேசப்பட்டது.

தற்போது இதற்கு விளக்கம் அளித்து சோனியா அகர்வால் கூறும்போது, "ஒரு தொடரில் நானும், எஸ்.பி.பி.சரணும் நடித்த திருமண காட்சி புகைப்படம் வெளியாகி நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்தியை பரப்பினர். எனக்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன்.

எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்து இருக்கிறேன்'' என்றார்.


Next Story