'உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான்' - மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அசோக் செல்வன்


உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான் - மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அசோக் செல்வன்
x

உலகிலேயே மிகவும் அழகான பெண் என மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அசோக் செல்வன் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

'சூது கவ்வும்' படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், 'ஓ மை கடவுளே', 'தெகிடி', 'நித்தம் ஒரு வானம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான 'போர்தொழில்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் திருமணம் கடந்த புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் சிலர் கீர்த்தி பாண்டியனை நிறத்தை வைத்து உருவ கேலி செய்யும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், நிறத்தை வைத்து மனைவியை உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசோக் செல்வன் தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அசோக் செல்வன், உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான்' என்று கருத்து பதிவிட்டுள்ளார். அசோக் செல்வனின் பதிவு அவரது மனைவியை உருவ கேலி செய்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது.



1 More update

Next Story