திருமண வயதை கடந்துவிட்டேன் - நடிகர் சல்மான்கான்


திருமண வயதை கடந்துவிட்டேன் - நடிகர் சல்மான்கான்
x

தனக்கு திருமண வயது கடந்து விட்டது என்றும் முன்னாள் காதலிகள் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கான் 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஸ்லானி, கத்ரினா கைப், சோமி அலி என்று பல நடிகைகளுடன் அவர் காதலில் இருந்து பிறகு முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் துபாயில் பட விழா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்ற சல்மான்கானிடம் ஒரு பெண் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. என்னை மணந்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்" என்றார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சல்மான்கான் அளித்த பேட்டியொன்றில், "என் முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. தவறு என்னுடையதுதான். என்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம். எனது காதல் கதைகள் என்னோடு சமாதி ஆகி விடும்'' என்று தெரிவித்து இருந்தார்.


Next Story