காதலில் யாஷிகா ஆனந்த்


காதலில் யாஷிகா ஆனந்த்
x

தமிழில் 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சி நடனமும் ஆடி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வந்தார்.

கார் விபத்தில் சிக்கி சில மாதங்கள் ஒதுங்கி இருந்த அவர் சிகிச்சை பெற்று குணமான பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கிறார். 4 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த், நடிகர் ரிச்சர்ட்டை காதலிப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது. இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதை பார்த்தே அவர்கள் காதலிப்பதாக பேசி வருகிறார்கள். இருவர் காதலுக்கும் வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் காதலை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

ரிச்சர்ட் பிரபல நடிகையும், அஜித்குமார் மனைவியுமான ஷாலினியின் சகோதரர் ஆவார். திரவுபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார்.

1 More update

Next Story