பழம்பெரும் மலையாள நடிகை சென்னையில் காலமானார்


பழம்பெரும் மலையாள நடிகை சென்னையில் காலமானார்
x

பிரபல மலையாள நடிகையாக இருந்தவர் பேபி கிரிஜா.

சென்னை,

பிரபல நடிகையாக இருந்தவர் பேபி கிரிஜா. இவர் கண்ணூரைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் சுனிதா தம்பதியரின் மகள் ஆவார். வேலை காரணமாக ஆலப்புழாவுக்கு இடம் பெயர்ந்தனர். பின்னர் கிரிஜா முதன்முதலில் ஜீவிதா நவுகா படத்தில் நடித்தார். இப்படம் மூலம் மலையாளத்தில் பிரபலமானார் கிரிஜா.

அடுத்தடுத்த ஆண்டுகளில், பேபி கிரிஜா 'அச்சன்', 'விஷப்பிண்டே விலி', 'பிரேமலேகா', 'அவன் வருன்னு' மற்றும் 'புத்ர தர்மம்'உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்தார்.

பின்னர், அவர் நடிப்பை விட்டுவிட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் முன்பே இறந்து விட்டார். இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், பழம்பெரும் மலையாள நடிகையாக இருந்த கிரிஜா சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். இவருக்கு வயது 83.


Next Story