யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படப்பிடிப்பு நிறைவு


யோகி பாபு நடிக்கும் வானவன் படப்பிடிப்பு நிறைவு
x
தினத்தந்தி 21 May 2024 8:28 PM IST (Updated: 22 May 2024 5:42 PM IST)
t-max-icont-min-icon

யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வானவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

திரை உலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான யோகி பாபு தற்போது ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் மண்டேலா மற்றும் தர்மபிரபு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கதாநாயகனாகவும் பல படங்களில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் பூமர் அங்கிள், மிஸ்மேகி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் வானவன். படமானது காடுகளின் வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது. ஈடன் பிலிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாமஸ் ரெனி ஜார்ஜ் தயாரிக்கிறார். இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்குகிறார். படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ரமேஷ் திலக், லட்சுமி பிரியா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படக்குழுவினர் இதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.


Next Story