ஆர்.கண்ணன் படத்தில் சிவன் வேடத்தில், யோகிபாபு
ஆர்.கண்ணன் படத்தில் யோகிபாபு சிவன் வேடத்தில் நடிப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது.
'ஜெயம்கொண்டான்' படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான ஆர்.கண்ணன் இதுவரை , 'கண்டே ன் காதலை ', 'இவன் தந்திரன்', 'தள்ளிப்போகாதே ' உள்பட 11 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவருடைய 12-வது படத்துக்கு, 'பெரியாண்டவர்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், யோகிபாபு கதை நாயகனாக நடிக்கிறார். படத்தில் அவர் சிவன் வேடத்தில் நடிப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. இதுபற்றி டைரக்டர் ஆர்.கண்ணன் கூறியதாவது:-
''இது ஒரு டைம் டிராவலர் படம். யோகிபாபு நடித்த 'கோலமாவு கோகிலா', 'கூர்கா ', 'தர்மபிரபு', 'மண்டேலா' பட வரிசையில், இந்தப் படமும் நகைச்சுவை படைப்பாக இடம்பெறும். சிவன் வேடத்தில் யோகிபாபு நடிக்கும் காட்சிகளுக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பிரமாண்டமான ஒரு அரங்கு அமைக்கப்படுகிறது. பாடல்கள் மற்றும் வசனங்களை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். இது, டைம் டிராவலர் கதை என்பதால், படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி யோகிபாபுகள் நிறைய இடம் பெறுகின்றன.