பிரபுதேவா நடிப்பில் விஜய் டைரக்ஷனில், `லட்சுமி'
தமிழ் சினிமா நீண்ட காலத்துக்கு பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்க்க இருக்கிறது. அந்த படத்துக்கு, `லட்சுமி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
‘‘நடனத்தை விரும்பும் அனைவருக்குமான படமாக இது இருக்கும். மிகப்பெரிய நடன திருவிழாவாக வரவேற்கப்படும்'' என்கிறார், படத்தின் டைரக்டர் விஜய். இவர் மேலும் கூறுகிறார்:-
``லட்சுமி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு படம். பிரபுதேவாவை தவிர வேறு யார் சர்வதேச தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும்? அவர்தான் `லட்சுமி'யின் நாயகன். நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யை க்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம்.
இதில், பிரபுதேவா தனது சினிமா பயணத்தில் மிக சிறந்த உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். பிரபுதேவாவின் நடனத்துக்கு ஏற்றவாறு இசையமைத்து இருக்கிறார், சாம் சி.எஸ். நீரவ்ஷா, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மதன் கார்க்கி, பாடல்களை எழுதியிருக்கிறார். ஸ்ருதி நல்லப்பா, ரவீந்திரன் ஆகிய இருவரும் படத்தை தயாரித்து இருக்கி றார்கள். படம், மிக சிறப்பாக வந்திருக் கிறது.''

Related Tags :
Next Story