செல்வராகவன் டைரக்‌ஷனில், தனுஷ்!


செல்வராகவன் டைரக்‌ஷனில், தனுஷ்!
x
தினத்தந்தி 6 July 2019 11:00 PM GMT (Updated: 6 July 2019 4:49 PM GMT)

செல்வராகவன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்த `காதல் கொண்டேன்,’ `புதுப்பேட்டை,’ `மயக்கம் என்ன’ ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

 தனுஷ் இப்போது வெற்றிமாறன் டைரக்‌ஷனில், `அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் தனுஷ், அவருடைய அண்ணன் செல்வராகவன் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார்.

இது, செல்வராகவன்-தனுஷ் இருவரும் இணையும் 4-வது படம். இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக பேசப்படுகிறது. இருவரும் மீண்டும் இணைவது ஒரு திகில் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கதை விவாதம் தொடங்கி விட்டது.

Next Story