வயதான தோற்றத்தில் பகத் பாசில்


வயதான தோற்றத்தில் பகத் பாசில்
x
தினத்தந்தி 13 March 2020 9:42 AM GMT (Updated: 13 March 2020 9:42 AM GMT)

மலையாள சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பில், முதன்மையானவர் பகத் பாசில். இவர் பிரபல இயக்குனரான பாசிலின் மகன் ஆவார்.

பகத் பாசில் தற்போது ‘மாலிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மகேஷ் நாராயண் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பகத் பாசில், பார்வதி ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியையும், பல விருது களையும் குவித்த ‘டேக் ஆப்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உருவாகி வரும் ‘மாலிக்’ திரைப்படம், சுலைமான் என்ற ஒருவரின் வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதை 1960-களில் நடைபெறுவதுபோல தொடங்கி, தற்போதைய காலகட்டம் வரை நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பகத் பாசில் 20 வயது இளைஞனாகவும், 57 வயது மனிதராகவும் இருவேறு தோற்றங்களில் நடிக் கிறார். 57 வயது முதியவர் தோற்றம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தோற்றம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பகத் பாசிலின் இந்த தோற்றமானது, அவரது தாத்தா, அதாவது பாசிலின் தந்தையின் தோற்றத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story