சாய் பல்லவியின் நடன ஆர்வம்


சாய் பல்லவியின் நடன ஆர்வம்
x
தினத்தந்தி 17 May 2021 9:55 AM GMT (Updated: 17 May 2021 9:55 AM GMT)

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் சாய்பல்லவி. இவரது நடனத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தனுசுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை நிகழ்த்தியது.

நடன ஆர்வம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

''எனக்கு சிறுவயதில் இருந்தே நடனம் மிகவும் பிடிக்கும். எனது அம்மா உற்சாகப்படுத்தினார். அப்போது நடன வகுப்புகளுக்கு செல்லவில்லை. தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகள் ஆடுவதை பார்த்தே நடனம் ஆடினேன். நன்றாக ஆடுவதாக எனது அம்மா பாராட்டினார். சிறிய வயதில் மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் நடனங்கள் மிகவும் பிடிக்கும். அவர்கள் வீடியோக்களை பார்த்து அப்படியே ஆட பயிற்சி எடுத்தேன். கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் ஆடி இருக்கிறேன். முதல் முறையாக 2008-ல் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நான் அப்போது ஆடிய வீடியோ இப்போதுகூட 
யூடியூப்பில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த பிறகு மருத்துவம் படிக்க ஜார்ஜியா சென்றேன். கதாநாயகியாகாமல் இருந்திருந்தால் இப்போது டாக்டர் தொழில் பார்த்துக்கொண்டு இருந்திருப்பேன். எனக்கு முகப்பருக்கள் இருந்ததால் கதாநாயகி ஆவேன் என்ற நம்பிக்கை இல்லை. மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரம் தேடி வந்ததால் நடிகையாக மாறினேன். மலராக மேக்கப் இல்லாமல் நடித்தேன். அதில் இருந்து இன்னும் மேக்கப் இல்லாமலேயே நடிக்கிறேன்.''

இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

Next Story