தோற்றம் மாறிய திரிஷா


தோற்றம் மாறிய திரிஷா
x
தினத்தந்தி 16 Jun 2021 9:25 PM GMT (Updated: 16 Jun 2021 9:25 PM GMT)

புதுமுக நடிகைகள் பலர் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை.

திரிஷா 18 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறார். புதுமுக நடிகைகள் பலர் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு படம் கடந்த ஏப்ரல் மாதம் ஓ.டி.டி. தளத்தில் வந்தது. கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்து கொரோனாவால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. ராங்கி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கிறது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ராம் என்ற மலையாள படம் ஆகியவை கைவசம் உள்ளன. கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் திரிஷா தலைமுடியை மாற்றி புதிய தோற்றத்தில் உள்ள தனது புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் உங்களின் புதிய சிகை அலங்காரம் நன்றாக உள்ளது. வயதானாலும் அழகு குறையவில்லை என்று வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் உங்கள் முகத்தை பார்த்தால் வயதானது தெரிகிறது. எப்படி இருந்த திரிஷா இப்படி ஆகி விட்டாரே, தோற்றம் நன்றாக இல்லை என்றெல்லாம் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

Next Story