இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி, டைரக்டர் ஆனார்


இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி, டைரக்டர் ஆனார்
x
தினத்தந்தி 30 July 2021 12:05 AM IST (Updated: 30 July 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றிபெற்ற விஜய் ஆண்டனி, அடுத்து டைரக்டர் ஆகியிருக்கிறார்.

தனது சொந்த பட நிறுவனம் சார்பில், ‘பிச்சைக்காரன்-2’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இந்த தகவலை அவரே தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

‘‘என் நீண்ட கால கனவு நிறைவேறி இருக்கிறது. டைரக்டரானது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் உதவி டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறேன். பல டைரக்டர்களிடம் தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டேன்.

இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது.

படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.’’
1 More update

Next Story