இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்


இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:35 PM IST (Updated: 23 Aug 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்.

ஹாலிவுட்டில் ஓ.டி.டி. தளங்களுக்காகவே பிரத்யேகமாக படங்கள் தயாராகின்றன. இந்த படங்களையும் தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.

இணையதள படங்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் பிரபல ஓ.டி.டி. தளம் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டிகாப்ரியோவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.223 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக வரும் ஜெனிபர் லாரன்சுக்கு ரூ.186 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர். ஜோனா ஹில், மார்க் ரைலன்ஸ், மெரில் ஸ்ட்ரீப், டைலர் பெர்ரி, ராப் மார்கன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஆடம் மெக்கே இயக்குகிறார்.

பூமியை தாக்க வரும் எரிகல்லை மையமாக வைத்து நகைச்சுவை படமாக எடுக்கின்றனர்.

1 More update

Next Story