21 பெண்கள் புகார் பாலியல் சர்ச்சையில் ஹாலிவுட் நடிகர்

21 பெண்கள் புகார் பாலியல் சர்ச்சையில் ஹாலிவுட் நடிகர்
x
தினத்தந்தி 30 Aug 2021 6:06 PM GMT (Updated: 30 Aug 2021 6:06 PM GMT)

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இன்னொரு ஹாலிவுட் நடிகரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் பெயர் ரோன் ஜெர்மி. இவர் ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஏராளமான ஆபாச படங்களிலும் நடித்து இருக்கிறார். ரோன் ஜெர்மி பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 பெண்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் மீது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகி ரோன் ஜெர்மி 15 வயது முதல் 51 வயது வரையிலான 21 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

ரோன் ஜெர்மியின் வழக்கறிஞர் கூறும்போது, “ஜெர்மி பலாத்காரம் செய்பவர் இல்லை. அந்த பெண்கள் அவருடன் விரும்பித்தான் சென்றார்கள்” என்றார். ஜெர்மி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story