ரஷியாவில் அஜித் பைக் பயணம்

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படமாக்க படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு ரஷியா சென்றனர்.
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படமாக்க படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு ரஷியா சென்றனர். அங்கு வில்லன்களுடன் அஜித் மோதும் சேசிங் சண்டை காட்சியை படமாக்கினர். 10 நாட்கள் இந்த சண்டை காட்சி படமாகி உள்ளது. படத்தை வினோத் இயக்குகிறார். நாயகியாக கியூமா குரோஷி நடிக்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். தற்போது ரஷியாவில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். ஆனால் அஜித் ரஷியாவிலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பைக் அருகில் அஜித் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகிறது. ரஷியாவை பைக்கில் சுற்றி பார்க்க அஜித் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் அவர் பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள சுற்றுலா தலங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றை பைக்கிலேயே சென்று பார்க்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சிக்கிம் வரை 10 ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story