ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்

பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் கொண்டதை தொடர்ந்து பிரபல நடிகர் ஒருவர் பங்கேற்று இருக்கிறார்.
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர்.
மேலும் நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story