என் பயத்தை போக்கினார் - ஆர்யா


என் பயத்தை போக்கினார் - ஆர்யா
x
தினத்தந்தி 15 Oct 2021 6:21 PM GMT (Updated: 15 Oct 2021 6:21 PM GMT)

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் அரண்மனை 3 திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டு இருக்கிறார். இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. ஹாரர் காமெடி கலந்து வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் குறித்து ஆர்யா கூறும்போது, ‘நான் திகில் படங்களை பார்த்ததும் இல்லை. நடித்ததும் இல்லை. திகில் படங்களை பார்க்க எனக்கு பயம். இந்நிலையில், அரண்மனை 3 படத்தில் நடிக்க சுந்தர்.சி கேட்டபோது, நான் மறுத்தேன். எப்படி நடிப்பது என்று கேட்டேன். அதற்கு சுந்தர்.சி, தலையை மெதுவாக கீழே சாய்த்து கண் விழித்து பார்த்தால் போது பேய் படமாக எடுத்து விடுவேன் என்றார். அவ்வளவுதானா என்று நான் நடிக்க சம்மதித்தேன். எனக்குள் இருந்த பயம் போய்விட்டது’ என்றார்.


Next Story