சினிமா துளிகள்

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan paying homage at the tomb of St. Rajkumar

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.


இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதன் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதேபோல், நடிகர் பிரபுவும், பெங்களூரு சென்று நடிகர் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்... சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
3. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஜெகதாப்பட்டினத்தில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
4. 'பீஸ்ட்' படத்தின் பாடல் புரோமோவிற்கென பிரத்யேக படப்பிடிப்பு நடத்திய நெல்சன்..!
நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் இடம்பெறும் காட்சிகள் நிறைந்த பாடல் புரோமோ வீடியோ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
5. தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.