சினிமா துளிகள்

எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி + "||" + Shock to the fans who went to see the Enemy

எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும், ஆர்யா, விஷால் நடித்த எனிமி படமும் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தனர். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் பிரபலமான ஒரு தியேட்டரில் எனிமி படத்தின் இரண்டாம் பாதியை முதலில் போட்டிருக்கிறார்கள்.


என்டு கார்டு வந்தபோது தான் அது இரண்டாம் பாதி என்று ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் கத்தி கூச்சலிடவே போலீசாரை வைத்து ரசிகர்களை சமாதானம் படுத்தி இருக்கிறார்கள்.

அந்த தியேட்டரில் நடந்ததை வீடியோ எடுத்து ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இரண்டாம் பாதியை முதலில் பார்த்தவர்கள், என்னடா படம் இது என்று அந்த வீடியோவில் சொல்வதை பார்க்க முடிகிறது.

என்டு கார்டு வரும் வரைக்குமா இது இரண்டாம் பாதி என்று தெரியாமல் பார்த்தீர்கள் என்று மற்றவர்கள் கேட்டதற்கு, ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டதால் கடைசியில் தான் பெயர் எல்லாம் வரும் என்று நினைத்துவிட்டோம் என்று படம் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் - சமந்தா
விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
3. இங்கிலாந்தில் சமூக பரவலான ஒமைக்ரான் பாதிப்பு; சுகாதார மந்திரி அதிர்ச்சி
இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாகி உள்ளது என அந்நாட்டு சுகாதார மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
4. கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்... சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடலால் சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
5. இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.