சிக்கலில் இருந்து மீண்ட சிம்பு... மாநாடு ரிலீஸ் ஆனது


சிக்கலில் இருந்து மீண்ட சிம்பு... மாநாடு ரிலீஸ் ஆனது
x
தினத்தந்தி 25 Nov 2021 10:41 PM IST (Updated: 25 Nov 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் பெரும் சிக்கலுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியானதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னை:

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்  காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மாநாடு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
1 More update

Next Story