அஜித்தின் வலிமை... பின்வாங்கிய பிரபாஸ், மோதும் விஷால்


அஜித்தின் வலிமை... பின்வாங்கிய பிரபாஸ், மோதும் விஷால்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:57 PM IST (Updated: 4 Jan 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் அஜித்துடன் மோத இருக்கிறது.

விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள். இந்நிலையில், இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.

அன்றைய தினத்தில் பிரபாஸின் ராதே ஷியாம் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக ஆந்திராவில் பல தியேட்டர்கள் மூடியதால் ராதே ஷியாம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், விஷால் தனது படத்தை வெளியிட முடிவு செய்து அறிவித்திருக்கிறார்.

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story