விஜய் சேதுபதிக்கு பதில் களம் இறங்க போகும் பிரபல நடிகர்?


விஜய் சேதுபதிக்கு பதில் களம் இறங்க போகும் பிரபல நடிகர்?
x
தினத்தந்தி 11 Jan 2022 6:23 PM GMT (Updated: 11 Jan 2022 6:23 PM GMT)

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகியதற்கு பின் அந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கபோவதாக பேசப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை உருவாக்கவுள்ளதாகவும் அப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது.  

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று பல எதிர்ப்புகள் வந்ததிருந்தது. அதன் பிறகு அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார்.

தற்போது அதே படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஸ்லம்டாக் மில்லியனர், தி லாஸ்ட் ஏர்பென்டர், சாப்பி, ஹோட்டல் மும்பை, தி வெட்டிங் கெஸ்ட் உள்பட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த தேவ் படேல் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவுகின்றன. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story