ஹரிஷ் கல்யாண் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு


ஹரிஷ் கல்யாண் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 13 Jan 2022 5:28 PM GMT (Updated: 13 Jan 2022 5:28 PM GMT)

ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்தானி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாரால பிரபு போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது இயக்குனர் சசி இயக்கும் படத்தில் நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். சித்தி இத்னானி ஏற்கெனவே சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'நூறு கோடி வானவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர்களை இன்று வெளியிட்டனர்.

இன்றைய நவீன காலத்தின் காதல் மற்றும் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேச இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் - வினோ என்ற கதாபாத்திரத்திலும் சித்தி இத்னானி - பென்னி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், ரினில், விஜே பார்வதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்து, சித்து குமார் இசையமைக்கிறார்.

Next Story