சினிமா துளிகள்

நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ் + "||" + GV Prakash with actor Vishal

நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்
நடிகர் விஷாலின் அடுத்த படமான மார்க் ஆண்டனி படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் இந்த கூட்டணியை எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் 33வது படமான இதை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.


இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் இசை வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கப்போகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபாஸ் பட தலைப்பில் ஜி.வி.பிரகாஷ்
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் தலைப்பில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.
2. ஜி.வி.பிரகாசின் 'ஜெயில்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
3. திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ்
டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.
4. வெப் தொடர் மூலம் முதன்முறையாக இணைந்த ராணா - வெங்கடேஷ்
பிரபல தெலுங்கு நடிகர்களான ராணாவும், வெங்கடேஷும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள வெப் தொடரை கரண் அன்ஷுமான் இயக்க உள்ளார்.
5. சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.