தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய தெருக்குரல் அறிவு


தனுஷிற்கு ஓப்பனிங் சாங் பாடிய தெருக்குரல் அறிவு
x
தினத்தந்தி 14 Jan 2022 6:16 PM GMT (Updated: 14 Jan 2022 6:16 PM GMT)

தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ஓப்பனிங் பாடலை அறிவு பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தி கேஸ்ட்லெஸ் கலக்டிவ் பேண்டில் அறிமுகமாகி, வாத்தி ரைடு, நீயே ஒலி, வாய்ஸ் ஆப் யுனிட்டி, போன்ற பல பாடல்களை எழுதி பாடிய அறிவு இந்த பாடலை பாடியுள்ளார். இதனை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார். அதில், மாறன் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் நடிகர் தனுஷுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story