ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் விஷ்ணு விஷால்


ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் விஷ்ணு விஷால்
x
தினத்தந்தி 19 Jan 2022 6:09 PM GMT (Updated: 19 Jan 2022 6:09 PM GMT)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலுக்கு சமீபத்தில் கொரோனா ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.

கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால்,சில நாட்களுக்கு முன்பு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார் இதனை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது, கடைசியாக நான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டேன். எனக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதற்காக மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு லேசானதாக இல்லை. பாதிப்பின்போது, 10 நாட்களாக வைரஸ் என்னை படுத்தி எடுத்து விட்டது. இப்போதும் நான் சோர்வாக உணர்கிறேன். விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன். என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அத்தனை அன்புக்கும் நன்றி. எனது படங்கள் தொடர்பான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதை எதிர்நோக்கியுள்ளேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story