நடிகர் விஜய்யை பற்றி நெகிழ்ந்து பேசிய தயாரிப்பாளர்


நடிகர் விஜய்யை பற்றி நெகிழ்ந்து பேசிய தயாரிப்பாளர்
x

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில் விஜய்யை பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

நெல்சன் திலிப்குமார் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.  இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் விஜய்யின் 66வது திரைப்படத்தை இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அண்மையில் ஒரு பேட்டியில் இப்படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் பேசியுள்ளார்.

அதில், இயக்குனர் வம்சி இப்படத்தின் கதையை கூறிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இதை நாங்கள் விஜயிடம் கூறிய போது அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. அதுமட்டுமின்றி அவர் நெகிழ்ந்து போய் சொன்ன ஒரு விஷயம் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அந்த கதையை கேட்ட பிறகு அவர் இதுபோன்ற ஒரு அற்புதமான கதையை நான் இந்த 20 வருடத்தில் ஒருமுறை கூட கேட்டதில்லை என்று கூறினார். மேலும் விஜய்யை வைத்து உருவாக்கப்போகும் இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக அந்த பேட்டியில் தயாரிப்பாளர் தில் ராஜு கூறினார்.

கொரோனா காரணமாக எந்த தாமதமும் ஏற்படாமல் இருந்தால், படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும். ஒருவேளை சில காரணங்களால் தீபாவளிக்கு படம் ரிலீசாக தவறினால், அடுத்த (2023)ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Next Story