சினிமா துளிகள்

வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு + "||" + New announcement from the web crew

வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு
நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு திரில்லர் படமாக உருவாகி வரும் வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.


4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்க, ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் மற்றும் அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் பிரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். காட்பாதர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை வாலிபர் போலீஸ் காவலில் இறந்த விவகாரம்: போலீசார் மீது கொலை வழக்கு முதல்-அமைச்சர் அறிவிப்பு
சென்னை வாலிபர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
2. மது விலக்கை வலியுறுத்தி பா.ம.க. விரைவில் போராட்டம்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவிப்பு
பா.ம.க. சார்பில் மது விலக்கை வலியுறுத்தி விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவித்துள்ளார்.
3. அனைத்து அரசு பஸ்களிலும் 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம்: அமைச்சர் அறிவிப்பு
அனைத்து அரசு பஸ்களிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்ட சபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
4. கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் நம்ம ஊர் திருவிழா: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
5. குற்றாலத்தில் ரூ.15 கோடியில் நவீன வசதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
குற்றாலத்தில் ரூ.15 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், பூண்டி அணைக்கட்டில் படகு சவாரி அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.