மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் வெளியீடு!


மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் வெளியீடு!
x
தினத்தந்தி 27 Jan 2022 6:01 PM GMT (Updated: 27 Jan 2022 6:01 PM GMT)

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் போஸ்டரை குடியரசு தின விழாவையொட்டி நேற்று வெளியிடப்பட்டது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தான் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி புனித்ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் புனித் ராஜ்குமார் ராணுவ உடையில் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்ற படம் உள்ளது. பின்னணியில் ராணுவ வாகனங்களும், வானத்தில் ஹெலிகாப்டர் பறப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.

இதையொட்டி பெங்களூருவில் புனித் ராஜ்குமாரின் பேனர்களுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தும், பால் ஊற்றியும், பட்டாசு வெடித்தும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடினர். இதையொட்டி புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

Next Story