வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி... கலாய்க்கும் நெட்டிசன்கள்


வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி... கலாய்க்கும் நெட்டிசன்கள்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:07 PM GMT (Updated: 27 Jan 2022 6:07 PM GMT)

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி நேற்று சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் அதனை கலாய்த்து நெட்டிசன்கள் பதில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. இவர் தமிழில் நான் அவன் இல்லை, காஞ்சனா, மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் குடியரசு தினமான நேற்று அவருடைய சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை இணைத்து சுதந்திர தின விழா என பதிவிட்டிருந்தார். இதனை சமூக வலைத்தள வாசிகள் அவரை கலாய்த்து பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது.

அதன் பிறகு குடியரசு தின விழா என அதனை மாற்றி பதிவிட்டிருந்தார்.

Next Story