தந்தையின் கனவை நிறைவேற்றிய சாக்‌ஷி அகர்வால்


தந்தையின் கனவை நிறைவேற்றிய சாக்‌ஷி அகர்வால்
x
தினத்தந்தி 28 Jan 2022 6:06 PM GMT (Updated: 28 Jan 2022 6:06 PM GMT)

காலா, விஸ்வாசம், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தந்தையின் கனவை நிறைவேற்றி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சாக்‌ஷி அகர்வால் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும் போது, சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது எனது தந்தையின் 22 வருட கனவாக இருந்தது. இதை நிறைவேற்றும் விதமாக புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரினை வாங்கி இருக்கிறார். இது என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்’ என்றார்.

மேலும் ஒரு நடிகையாக, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த கனவுகளை நம்புவதற்கு தன்னுடைய இந்த வெற்றி உதவும் எனவும், தன்னால் இதைச் செய்ய முடிந்தால் நிச்சயம் ஒவ்வொருவராலும் இது முடியும் என்றும் சாக்‌ஷி அகர்வால் கூறியிருக்கிறார்.

Next Story