காயங்களுடன் நடிகர் அருண் விஜய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..


காயங்களுடன் நடிகர் அருண் விஜய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
x

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவுள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் அருண் விஜய் 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நீங்கள் திரையில் பார்க்கும் என்னுடைய அனைத்து கடினமான செயல்களுக்கு பின்னாலும் இது போன்ற ஏராளமான காயங்கள் உள்ளன. ஆனால், இப்போதும் ஸ்டன்ட் செய்ய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் உங்களை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story