பிரபல நடிகைக்கு பெண் குழந்தை


பிரபல நடிகைக்கு பெண் குழந்தை
x

நடிகைக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர். இவர் தமிழில் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்சேதுபதியின் மாமனிதன் படங்களில் நடித்துள்ளார். இதுவும் கடந்து போகும், நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன். நீ நான் நிழல் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி நாயருக்கும், அனீஸ் உபசன என்பவருக்கும் 2011-ல் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 2016-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். பெண் குழந்தையுடன் அஞ்சலி நாயர் தனியாக வாழ்ந்தார். பின்னர் அஞ்சலி நாயருக்கும், மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய அஜித் ராஜுவுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அஞ்சலி நாயருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து வலைத்தளத்தில் அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினராக வந்துள்ள பெண் குழந்தை போலவே வாழ்க்கை அழகானது. அனைவரின் வாழ்த்துகளும் தேவை" என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story