குஷ்புவிற்கு கேரளா கோவில் அளித்த சிறப்பு கவுரவம்


குஷ்புவிற்கு கேரளா கோவில் அளித்த சிறப்பு கவுரவம்
x

நடிகை குஷ்பு நடிப்பு மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்றவர் குஷ்பு.

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்ற குஷ்பு நடிப்பது மட்டுமல்லாமல் பா.ஜ.க கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை குஷ்புவுக்கு கேரளா, திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம், அந்த வகையில் நடிகை குஷ்புவை கோவில் நிர்வாகம் தேர்வு செய்து அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் குஷ்பு கலந்து கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, "கடவுளின் தெய்வீக ஆசீர்வாதம். திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நாரி பூஜை செய்ய என்னை அழைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இத்தகைய பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Related Tags :
Next Story