அந்த படத்திற்கும் இதற்கும் எந்த ஒப்பிடுதலும் இல்லை.. நடிகர் கார்த்தி


அந்த படத்திற்கும் இதற்கும் எந்த ஒப்பிடுதலும் இல்லை.. நடிகர் கார்த்தி
x

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பல ஆண்டுகள் தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஒரு தருணம். பொன்னியின் செல்வன் படம் வரப்போகிறது இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது என்பது பெருமையாக உள்ளது. மற்ற படங்களில் பணியாற்றும் போது நம் சிந்தனைகள் வெளியே சென்று வரும் இதில் பணியாற்றும் போது எங்கிருந்தாலும் சிந்தனை அந்த கதாப்பாத்திரத்திலேயே இருக்கும். இதில் நடித்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்தது. தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அனைத்து பெரிய நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள் மொத்த தமிழ் திரையுலக்கத்தையும் பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அன்பு எப்பொழுதும் தேவை.

இந்த படத்தில் எல்லா கதாப்பாத்திரங்களும் மிக முக்கியமானவை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதி கதாப்பாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்தவை பாதி கதாப்பாத்திரம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. வந்தியத்தேவன் எல்லா கதாப்பாத்திரத்தையும் சந்திக்கக் கூடியவை எல்லாரிடமும் ஒரே மாதிரி பேச முடியாது. உடல் மொழி பேசுகிற மொழி ஒவ்வொருவரிடமும் மாறும் என்றார்.

இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, ஆயிரத்தில் ஒருவனில் சோழ தூதுவனாக நடித்திருந்தேன். முதலில் நீங்கள் கதையை புரிந்துக் கொண்டு வாங்க என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். மேலும் அந்த படத்திற்கும் இதற்கும் எந்த ஒப்பிடுதலும் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தில் அந்த காலக்கட்டத்தில் வாழ வேண்டும் என்றார்.


Next Story