பக்கா


பக்கா
x
தினத்தந்தி 24 April 2018 7:48 PM GMT (Updated: 24 April 2018 7:48 PM GMT)

தோனி ரசிகராக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பக்கா’. படத்தில், பிந்து மாதவி, நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.சூர்யா டைரக்டு செய்கிறார்.

விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பக்கா’ படத்தில், பிந்து மாதவி, நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்காளை ஆகியோரும் நடித்து வருகிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார். இணை தயாரிப்பு: பி.சரவணன். கதை-திரைக்கதை -வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், எஸ்.எஸ்.சூர்யா.

எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சி.சத்யா இசை அமைத்திருக்கிறார்.  ‘பக்கா’ படம் பற்றியும், அதில் நடிப்பது பற்றியும் கதாநாயகன் விக்ரம் பிரபு கூறியதாவது:-

“இந்த படத்தில், கோவில் திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு தீவிர ரஜினி ரசிகை, நிக்கி கல்ராணி. கிராமத்து பெரிய மனிதரின் மகள், பிந்து மாதவி.

மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதை. மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை அப்படியே பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்திராத யதார்த்தமான கதாபாத்திரத்தில், நடிக்கிறேன். சென்னை, புதுச்சேரி, குற்றாலம், ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

Next Story